Sudharshini / 2016 பெப்ரவரி 03 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஷ்
அரசியல் ரீதியாக அனைவரும் ஒன்றுபட்டு, மலையக கல்வியை ஊக்குவிக்க வேண்டுமென மத்திய மாகாண விவசாயத்துறை மற்றும் இந்து கலாசார அமைச்சர் எம்.ரமேஷ் கோரியுள்ளார்.
'மலையகத்தின் கல்வியை வளர்ச்சியடைய செய்வதற்காக அன்று, அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், 402 ஆசிரியர்களை நியமனம் செய்தார். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் வடக்கு, கிழக்கு பகுதியை சார்ந்தவர்கள். இவர்களுக்கூடாக கல்விக்கற்று இன்று 44 ஆயிரத்துக்கு மேலான ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்கள் மலையகத்தில் சேவையாற்றுகின்றார்கள் என்றால் அதற்கு வித்திட்டவர் அமரர்.சௌமிய மூர்த்தி தொண்டமான்தான்' என்றும் அவர் கூறினார்.
வட்டகொடை, வடக்கு மடக்கும்புரை தோட்டத்தில் 10 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
'மலையகத்தின் தந்தை என போற்றப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மறைந்த சௌமிய மூர்த்தி தொண்டமான் உருவாக்கிய இரண்டு தோட்டத்துக்கு நடுவில் ஒரு பாடசாலை என்ற திட்டமே இன்று மலையக கல்வி வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கின்றது. எதிர்காலத்தில் பெருந்தோட்ட பகுதிகளில் தேயிலை தொழில் நிலைத்திருக்காது.
அதனால் அரசாங்க தொழிலுக்கு தொழிலாளர்களின் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற அவரின் சிந்தனையால் மலையக தமிழ் பாடசாலைகளில் இன்று 44 ஆயிரத்துக்கு மேலான ஆசிரியர்கள் மற்றும் அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் பணிப்புரிவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது மேலும் உயர வேண்டும். சௌமியமூர்த்தி தொண்டமான் வீடு கட்டவோ, ஆலயம் அமைக்கவோ, ஆசைப்பட்டதில்லை. இரண்டு தோட்டத்துக்கு நடுவில் ஒரு பாடசாலை அமைய வேண்டும் என்றே ஆசைப்பட்டார்;' என்றார்.
22 minute ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
13 Apr 2026