2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

மழைநீர் சேகரிக்கும் நீர்த்தாங்கி திறப்பு

Kogilavani   / 2021 மார்ச் 23 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.சுரேஸ்குமார்

சர்வதேச நீர் தினத்தையொட்டி, மழைநீர் சேகரிக்கும் நீர்தாங்கியொன்று, பதுளை பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தில், திறந்து வைக்கப்பட்டது.

யுஎஸ்எய்ட் நிறுவனத்தின் நிதி அனுசரணையில், 30,000 லீற்றர் மழைநீரை சேகரிக்கும் வகையில் மேற்படி நீர்தாங்கி அமைக்கப்பட்டுள்ளது.

நீர்தாங்கியை மெருகூட்டும் வகையில், மாணவர்களின் கைவண்ணத்திலான ஓவியங்களும் நீர்தாங்கியைச் சுற்றி வரையப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், யுஎஸ்எய்ட் நிறுவனத்தின் அதிகாரிகள், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X