2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கவும்

Kogilavani   / 2021 ஏப்ரல் 01 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் களமிறங்குவதற்கு எதிர்ப்பார்ப்பவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,  முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில், நேற்று  (31) நடைபெற்ற கலந்தரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர்,  ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட விரும்புபவர்கள், எதிர்ப்பார்ப்பவர்களிடமிருந்து தமது   கட்சி அலுவலகம் விண்ணப்பங்களை கோரியுள்ளதாகவும்  இது தொடர்பான மேலதிகத் தகவல்கள் தேவைப்படும் பட்சத்தில் கண்டியிலுள்ள தமது அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

விண்ணப்பங்கள் கிடைத்தப் பின்னர், நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியான வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் என்றும் வெற்றிகரமாக தேர்தலை எதிர்கொள்வதற்கு அவர்கள் தயார்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X