2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

மாணவரின் தந்தைக்கு தொற்று; முன்பள்ளி மூடப்பட்டது

Kogilavani   / 2021 மார்ச் 25 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா  
 
பதுளை கந்தகெட்டிய பிரதேச சபையால் நடத்தப்பட்டு வரும் முன்பள்ளி, காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக, கந்தகெட்டிய பொது சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
 
இந்த முன்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரின் தந்தைக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்தே, முன்பள்ளி காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
 
முன்பள்ளியில் ஐம்பது சிறுவர்கள் கல்வி கற்று வருகின்றனர் என்றும் குறித்த 50 சிறுவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், முன்பள்ளியின் ஆசிரியரும் அவரது குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 
இதேவேளை, கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தில் நான்கு பொலிஸாருக்கு, கொரோனா வைரஸ் தொற்று நேற்று  (25) உறுதிபடுத்தப்பட்டது.  
 
மேலும் பதுளைப் பொலிஸ் நிலையத்தில் ஏழு பொலிஸாருக்கும் பொலிஸ் நிலைய ஊழியரொருவருக்குமாக எட்டுப் பேருக்கு, கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 
 
தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X