Janu / 2024 டிசெம்பர் 24 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் நோர்வூட் கெசல்கமுவ ஒயா வில் சட்ட விரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதன்போது மாணிக்ககல் அகழ்வில் பயன் படுத்தப்பட்ட நீர் இறைக்கும் மோட்டார் மற்றும் ஏனைய உபகரணங்களையும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூவர் கம்பளை பொகவந்தலாவ. எம்பிலிபிட்டிய ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
எஸ். சதீஸ்

34 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago