Editorial / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
லுணுகலை பிரதேசத்தை தளமாகக் கொண்டியங்கும் அக்கினிச் சிறகுகள் கல்வி அபிவிருத்தி ஒன்றியம், அனுபவமிக்க ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்களை, பாடசாலைகளுக்கு வழங்கியுள்ளது.
பசறை, பதுளை, மொனராகலை, நுவரெலியா, எட்டியாந்தோட்ட மற்றும் புஸ்ஸல்லாவை ஆகிய கல்வி வலயங்களில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட 47 பாடசாலைகளுக்கு வழங்கியுள்ளது.
அத்துடன், இரத்தினபுரியைத் தளமாகக் கொண்டியங்கும் முத்தமிழ் நற்பணி மன்றத்தின் அனுசரணையோடு இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 100 தமிழ்மொழிமூல பாடசாலைகளுக்கும் பாடசாலைகளின் அதிபர் ஊடாக ஒன்றியத்தின் தலைவர் யோ.அருண் பிரசாத் உட்பட குழுவினர், புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்களை வழங்கி வைத்தனர்.
“அக்கினிச் சிறகுகள் கல்வி அபிவிருத்தி ஒன்றியம்” தமிழ் மொழிமூல பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago