R.Maheshwary / 2021 ஜூன் 08 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கிர்த்திரத்ன
மாத்தளை மாவட்டத்தில் அரச அதிகாரிகள் மற்றும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் 6,000 பேருக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதென, மாத்தளை மாவட்ட கொரோனா ஒழிப்பு குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய,தம்புளை மாநகர சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட 1068 பேருக்கும் மாத்தளை மாநகர சபை அதிகாரிகள் 718 பேர் உள்ளிட்ட 1,470 பேருக்கும் யட்டவத்தையில் 400 பேர், பல்லேபொலவில் 388 பேர், கலேவலயில் 516, நாவுலவில் 435 பேர், லக்கலையில் 306, வில்கமுவையில் 340, இரத்தோட்டையில் 405> அம்பகங்கோரலையில் 208 அதிகாரிகள், உக்குவளையில் 472 அதிகாரிகளுக்கும் முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த 47 ஊடகவியலாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
52 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
4 hours ago