2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மாத்தளை பஸ்ஸில் பயணித்த பயணி மரணம்

Editorial   / 2024 மே 07 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ளை டிப்போவிற்கு சொந்தமான இந்த பஸ் நிட்டம்புவ பிரதேசத்தை செவ்வாய்க்கிழமை (07) அண்மித்த போது, ​​பின் இருக்கையில் பயணித்தவர் சுகயீனமுற்றிருப்பதை அறிந்ததும் பஸ் நிட்டம்புவ பொலிஸாருக்கு அருகில் நிறுத்தப்பட்டு அம்புலன்ஸ் வாகனத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அம்புலன்ஸில் வந்த வைத்திய அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்ட போது, நோயாளி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரியவந்ததையடுத்து, பொலிஸார் தலையிட்டு சடலத்தை வத்துப்பிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

உயிரிழந்த முதியவரின் விவரம் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X