Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 22 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
மலையகத்திலுள்ள மாற்று கட்சிகளைச் சேர்ந்த பலர், அடுத்துவரும் நாள்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இணையவுள்ளனர் என்று, காங்கிரஸின் நிதிச்செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தற்போது மட்டுமன்றி அடுத்தடுத்து அமையும் அரசாங்கம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையிலேயே இடம்பெறும் என்றும் அதில் மலையகத்தில் இ.தொ.காவின் ஆட்சியே தொடரும் என்றும் தெரிவித்தார்.
'இந்நிலையில் எதிர்கட்சியில் இருந்துகொண்டு எவ்விதமான அபிவிருத்திகளையும் மக்களுக்கு பெருமளவில் செய்ய முடியாது. எனவே மாற்றுக்கட்சி அங்கத்தவர்கள் பலர் இ.தொ.காவில் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்' என்றார்.
மாற்றுக்கட்சியை சேர்ந்த சாதாரண அங்கத்தவர்கள் தொடக்கம் உயர்மட்ட அங்கத்தவர்கள் வரை, இ.தொ.காவில் இணையவுள்ளனர் என்றும் எனவே அவர்களையும் இணைத்துக்கொண்டு இ.தொ.காவின் வேலைத்திட்டங்கள் தொடரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago