2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மிதந்த சடலம் மீட்பு

Editorial   / 2024 மே 19 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலத்தை தலவாக்கலை பொலிஸார் (19) மாலை மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் 18 வயதுடைய யுவதி எனவும் இவர் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் ரத்தினகிரியை சேர்ந்த பெரியசாமி திலிஷினா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் சடலம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு  நீதவான் வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு பின் பிரேத பரிசோதணைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்படும் என தெரிவித்தனர்.

மேலும் உயிரிழந்த பெண் தொடர்பில் விசாரணைகள் செய்து வருவதாகவும், இச் சம்பவத்தில் உயிரிழந்த பெண் தன்னுயிரை மாய்த்து கொண்டாரா அல்லது படுகொலைச் செய்யப்பட்டு நீர்த்தேகத்தில் வீசப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X