2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

மினி சூறாவளி தாண்டவம்; 23 வீடுகள் சேதம்

Kogilavani   / 2021 மார்ச் 08 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா பட்டல்கலை மேற்பிரிவு தோட்டத்தில், நேற்று முன்தினம் (07) மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக, 23 தொடர் மற்றும் தனி குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.

கடும் காற்று காரணமாக இந்தத் தோட்டத்திலுள்ள 15ஆம் இலக்க தொடர் குடியிருப்பின் கூரைகள் காற்றினால் அள்ளூண்டு சென்றுள்ளன. 

இதனால் இந்தக் குடியிருப்பில் 16 வீடுகளுக்கு மழையால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் கூரைத்தகரங்களும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை குறித்த பகுதியில், பாரிய மரம் ஒன்று முறிந்து வீடுகளின் மீது விழ்ந்ததில் வீட்டின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஏனைய இரண்டு வீடுகளின் கூரைத்தகரங்களும் சேதமடைந்துள்ளன.

இதேப் பகுதியில் அமைந்துள்ள மற்றுமொரு தொடர்மாடிக் குடியிருப்பில், ஒரு சில வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன.

குறித்த பகுதியில் சுமார் 50 மேற்பட்ட மரங்கள் மினி சூறாவளி காரணமாக முறிந்து விழுந்துள்ளன

பாதிக்கப்பட்ட பிரதேசத்தை, நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் கே.ரவி குழந்தைவேல் நேற்று (8) நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

மனித வள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக, மேற்படி வீடுகளை புனரமைப்பதற்கு  நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X