2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

மொஹொமட் ஆஸிக்   / 2017 ஜூலை 21 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி,  பூஜாப்பிட்டியவில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஏ.எம்.நவரத்ன (வயது 35) என்பவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக, பூஜாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டே, இவர் உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம், வயல்வெளியிலிருந்து இன்றுக் காலை மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக, வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X