Mayu / 2024 பெப்ரவரி 28 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ் , கௌசல்யா,
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலனிகல்ஸ் தோட்டப்பகுதியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் இன்று (28) உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மதுரைவீரன் நாகராஜ் (வயது 56) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
தேயிலை தோட்டத்துடன் இணைந்த பகுதியில் விவசாயம் செய்துவரும் நபர் காட்டு மிருகங்கள் வருவதை தடுக்க சட்ட விரோதமாக பாய்ச்சப்பட்டுள்ள மின்சாரத்தில் சிக்கி இவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பட்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
4 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Apr 2026