Kogilavani / 2020 நவம்பர் 03 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேன் செனவிரத்ன
கண்டி பெல்வத்த பிரதேசத்தில், மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவரொவர் பரிதாபகரமாக, நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
இம்முறை கல்வி பொதுத்தர உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய சுமின் கவிஷ்க (வயது 19) என்ற மாணவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மேற்படி மாணவர் தனது நண்பியுடன் அலைபேசியில் உரையாடுவதற்காக, இரவு வேளையில் வீட்டிலிருந்து வெளியே சென்றபோது, வயல்வெளியில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று தெரியவருகிறது.
பிரேதப் பரிசோதனைக்காக மாணவனின் சடலம், வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வயல் வெளியின் உரிமையாளர்கள் மூவரும் விலங்குகளை வேட்டையாடுவதற்காக மின்பொறி வைத்த நபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
9 hours ago
9 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago
17 Apr 2026