2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

மின்சார வேலியில் சிக்குண்டு பெண் மரணம்

Kogilavani   / 2021 மார்ச் 25 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா
 
பதுளை ஹாலிஎல பகுதியில், வீட்டுத்தோட்டத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டு பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று, ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
 
மேற்படிப் பிரதேசத்தைச் சேர்ந்த பனாகன்னி (வயது 56) என்பவரே, இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
 
மிருகங்களிடமிருந்து வீட்டுத் தோட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மேற்படி பெண்ணின் கணவரால், தோட்டத்தைச் சுற்றி மின்சார வேலிப் போடப்பட்டிருந்ததாகவும் இவ்வாறு போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டே குறித்த பெண் உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
பிரேதப் பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
 
இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X