2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மீன்பிடிக்க சென்றவர் நீருக்கு பலி

Janu   / 2023 ஜூன் 25 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிதங்கல சந்தியில் இருந்து அக்கர 80 செல்லும் வீதியில் மகாவலி கங்கையில் இறங்கி நபர் ஒருவர் மீன் பிடிப்பதற்கு வலை வீசிய போது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் அவ்விடத்தில் இருந்தவர்களினால் 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த மஹியங்கனை பொலிஸாரும் ஊர் மக்களும் இணைந்து கங்கையில் தேடுதலை மேற்கொண்ட போது குறித்த காணமல் போன நபர்  நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் தெய்யத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சல்பிடிகம தனேவெல பகுதியை சேர்ந்த 48 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர். 

ராமு தனராஜா

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X