Yuganthini / 2017 ஜூன் 08 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொத்மலை பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர், கெட்டபுலா சந்தியில், தமிழ் இளைஞர்களுக்கு முச்சக்கர வண்டி தரிப்பிடத்தை அமைத்துக் கொடுப்பதற்கு, தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறிய அவர்,
நாவலப்பிட்டி – தலவாக்கலை பிரதான வீதி, கெட்டபுலா சந்தியிலுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில், தமிழ் இளைஞர்கள் முச்சக்கர வண்டிகளை தரித்து நிறுத்துவதற்கு பெரும்பான்மையின இளைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் இடையூறுகளை ஏற்படுத்தி வந்தனர்.
இவ்விவகாரம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதுடன் நாவலப்பிட்டிய பொலிஸாரின் தலையீட்டையடுத்தே முரண்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்டன.
எனினும், கொத்மலை பிரதேச பெரும்பான்மையின அரசியல் பிரமுகரின் ஆதரவாளர்கள் சிலர், தொடர்ந்தும் தமிழ் இளைஞர்களுக்கு தொல்லைக் கொடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கொத்மலை பிரதேச சபை ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு, தமிழ் இளைஞர்களுக்கான முச்சக்கரவண்டி தரிப்பிடத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தேன். இதற்கான பெயர்ப்பலகையும் பொருத்தப்பட்து.
எனினும், அந்தப் பெயர்ப்பலகையானது அரசியல் தலையீடு காரணமாக அப்புறப்படுத்தப்பட்டது. மீண்டும் நான் தலையிட்டு, அந்தப் பெயர்ப் பலகையை குறித்த இடத்தில் வைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டேன்
எனினும், அந்தப் பெயர்ப்பலகையை அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, இளைஞர்கள் எனது கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் நாவலப்பிட்டிய பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ளதுடன் அமைச்சர்களின் கவனத்துக்கும் கொண்டுச் செல்வேன்” என்று அவர் மேலும் கூறினார்.
16 minute ago
25 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
55 minute ago
1 hours ago