Janu / 2024 ஜூன் 10 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சத்திரலியத்த , தும்பனே பிரதேச சபையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், இரண்டு கசிப்பு போத்தல்களுடன் சத்திரலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சத்திரலியத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்வத்த பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னதாகவும் குறித்த நபர் சட்ட விரோதமாக கசிப்பு விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அவரை அழைத்து அந்த தொழிலில் இருந்து விடுபடுமாறு எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சத்திரலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேக நபரை கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
26 minute ago
42 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
42 minute ago
49 minute ago
1 hours ago