Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 27 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
நாட்டில் மின்வெட்டு அட்டவணையிட்டு அமுல்படுத்தப்படுகிறது. நீர்வெட்டும் ஆங்காங்கே அமுல்படுத்தப்படுகின்றது. வெயில் கொளுத்துவதால், மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். மரம் செடி, கொடிகள் கருகுகின்றன.
இதற்கிடையில், செயற்கை மழையைப் பெய்யவைப்பதற்கான கடுமையான முயற்சிகளை இலங்கை மின்சார சபையினர், முன்னெடுத்துவருகின்றனர்.
நீரேந்தும் பிரதேசங்களிலும், நீர்த்தேக்கங்களுக்கு மேலாகவும், மேகங்களை செயற்கையான முறையில் கருக்கட்டல் செய்து மழையைப் பெய்யவைக்கும் முயற்சிகளில் கடந்த சில தினங்களாக ஈடுபட்டிருந்தனர்.
காசல்ரீ, மவுசாகலை ஆகிய நீர்த்தேக்கங்களுக்கு மேலாக, கடந்த சில நாள்களாக முன்னெடுக்கப்பட்ட முயற்சி ஓரவுக்குத்தான் கைகூடியது. தாம் எதிர்பார்த்த வெற்றிக்கிடைக்காமையால், அந்த முயற்சி தற்காலிகமாக கைவிடப்பட்டதென அறியமுடிகின்றது.
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகளில், பறந்து செயற்கை முறையில், மேகங்களை ஒன்றிணைந்தே இவ்வாறு மழையை பெய்யவைக்கின்றன. இந்த முயற்சி, நுவரெலியா கிரகரி வாவிக்கு மேலாக நேற்று (26) மாலை முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா வான் பரப்பில், ஹெலிகளும், சீ பிளேன்களும் பறப்பது வழமையானது என்றாலும், மேகங்களைக் கருக்கட்டல் செய்யவைக்கும் முயற்சியை அங்கிருந்த பலரும் புதினம் பார்ப்பதைப் போலவே பார்த்திருந்தனர்.
காசல்ரீ, மவுசாகலை நீர்த்தேக்கங்களுக்கு மேலாக மேகங்களை இலகுவாக ஒன்றிணைத்ததைப் போல, ஒன்றிணைக்க முடியவில்லை. மேகங்கள் முரண்டுபிடித்து, அங்குமிங்கும் வேகமாகக் கலைந்துவிட்டன. ஆகையால், பெரும் சத்தத்துடன் தாழப் பறந்து, பல தடவைகள் முயற்சிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது.
அதிலொரு தாய், கொழும்பில் அலுவலகத்தில் கடமையாற்றும் தன்னுடைய மகளுக்குக் தொலைபேசியின் ஊடாக தொடர்புகொண்டு, “ மகளே! இங்க சீ பிளேன் எல்லாம் பறக்குது, குருவிகள் பறக்கின்றன, ஆனால், மழை மட்டுமே பெய்யல” என ஆதங்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், மழையை வேண்டி சில இடங்களில் பூஜை வழிபாடுகளும், தூஆ பிரார்த்தனைகளும் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
13 minute ago
20 minute ago
25 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
25 minute ago
35 minute ago