Kogilavani / 2021 மார்ச் 22 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான தோட்டப் பகுதி தமிழ்ப் பாடசாலைகளில், விளையாட்டு மைதானம் இன்மையால், விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவதில் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
திறமையான மாணவர்கள் இருந்தும் அவர்களின் விளையாட்டுத் திறன்களை வளர்க்கவும் வெளிப்படுத்தவும் வாய்ப்பின்றி இருப் பதாக பாடசாலை நிர்வாகங்கள் கவலை தெரிவிக்கின்றன.
இப்பகுதியிலுள்ள தமிழ் அரசியல் பிரதிநிதிகள், பல சந்தர்ப்பங்களில் இப் பாடசாலைகளுக்கான விளையாட்டு மைதானங்களைப் பெற்றுக்கொடுக்க பல்வேறு முயற்சிகளைக் காலத்துக்குக் காலம் மேற்கொண்டிருந்த போதிலும் தோட்ட நிர்வாகங்களின் ஒத்துழையாமை காரணமாக அம்முயற்சிகள் கடந்த காலங்களில் சாத்தியமாகவில்லை.
எனவே தேசிய மட்டத்திலான ஆரோக்கியமான அரசியல் நகர்வுகளுடன் அனைத்து தோட்டப் பாடசாலைகளுக்கும் விளையாட்டு மைதானம் பெற்றுக்கொள்ளக் கூடியதான மு யற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பாடசாலை நிர்வாகங்கள் வேண்டுகோள் விடுக்கின்றன.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026