Freelancer / 2021 ஜூலை 17 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இருந்து பதிவான கோவிட் 19 வழக்குகளின் எண்ணிக்கை 30,000 ஐ தாண்டிவிட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் மத்திய மாகாணத்தில் 84 புதிய கோவிட் 19 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30,094 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய மாகாண சுகாதார சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மத்திய மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் நோய்த்தொற்றுகள் கண்டி மாவட்டத்தில் பதிவாகி உள்ளது. இங்கு 16,207 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தளை மாவட்டத்தில் இருந்து 5,780 வழக்குகளும், நுவரெலியா மாவட்டத்தில் 8,107 வழக்குகளும் இதுவரை பதிவாகியுள்ளன.
இதேவேளை, மத்திய மாகாணத்தில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 775 ஆக உயர்ந்துள்ளது.
இறந்தவர்களில்கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 498 பேரும், மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த 124 பேரும், நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 153 பேரும் அடங்குகின்றனர். R
12 minute ago
39 minute ago
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
39 minute ago
20 Dec 2025
20 Dec 2025