2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மாகாணங்களுக்கான நிதியை அதிகரிக்கவும்

Kogilavani   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மாகாண அமைச்சுகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

மத்திய மாகாண வரவு-செலவுத் திட்ட விவாவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

இந்த வரவு - செலவுத்திட்டத்தில் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மாகாணத்தில் நச்சுத்தன்மையற்ற உணவு உற்பத்தி, நீரிழிவு  மற்றும் டெங்கு நோயை கட்டுப்படுத்தல்,  மக்களது போசாக்கு  மட்டத்தை அதிகரித்தல், போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தல், வனவளத்தை பாதுகாத்தல் போன்ற இலக்குகளுடன் இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் மாகாண அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் ஊடாக மக்கள் எதிர்ப்பார்க்கின்ற தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைமையுள்ளதால் மத்திய அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு மாகாண அமைச்சுகளின் நிதியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாகாணசபை  உறுப்பினர்களாகிய நாம் மக்களுடன் நாளாந்தம் நெருங்கி பழகக் கூடியவர்கள். அவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது.

எனினும், எமக்கு வருடாந்தம் ஒதுக்கப்படுகின்ற 25 இலட்சம் ரூபாய் நிதியினால் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாதுள்ளது.  மாகாண அமைச்சுகளுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியை, குறிப்பிட்ட அமைச்சர்கள் தமது தொகுதிக்கு, தமக்கு  சார்பான உறுப்பினர்களுக்கு மட்டும்; ஒதுக்கிக்கொள்கின்றார்கள். இந்த போக்கை மாற்ற வேண்டும்.

மத்திய அரசாங்கத்தின் வரவு- செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு அடுத்தப்படியாக கல்வித்துறைக்கு அதிகமான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மத்திய மாகாண கல்வியமைச்சுக்கு கடந்த வருடத்தை விட 200 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியைக்கொண்டு மத்திய மாகாணத்தில் பின்தங்கியுள்ள தமிழ்க்கல்வியை முன்னேற்றுவதற்கும் தமிழ்ப்பாடசாலைகளின் பௌதிக வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .