Sudharshini / 2016 ஜனவரி 27 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஞ்சன குமார ஆரியதாச
தம்புளை, கலுன்தாவ பிரதேசத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான மாந்தோப்பொன்றுக்குள் புகுந்து மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான மாங்காய்களைத் திருடிச்சென்ற இருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.
சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 'அல்போன்ஸ்' ரக மாங்காய்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளன. இந்த ரக மாங்காய் ஒன்று 150 முதல் 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸார் கூறினர்.
சம்பவ தினத்தன்று, நால்வர் அடங்கிய குழுவினர் மேற்படி தோப்புக்குள் புகுந்து மாங்காய்களைப் பறித்து லொறியொன்றில் ஏற்றிசென்றுள்ளனர்.
இந்த லொறியை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்திய தம்புளை பொலிஸார், இருவரை கைது செய்த போது, மேலும் இருவர் லொறியிலிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இவ்வாறு தப்பியோடிய இருவரில் ஒருவர், திருடப்பட்ட மாங்காய்களைக் கொள்வனவு செய்வதற்காக வந்தவர் என்று தெரியவருகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தம்புளை பொலிஸார் தெரிவித்தனர்.
20 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
50 minute ago
1 hours ago