2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

முச்சக்கரவண்டியை செலுத்திய 14 வயது மாணவன் விபத்தில் பலி

Gavitha   / 2017 மார்ச் 04 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

குடாஓய பகுதியின் மஹாரகம பகுதியில் நேற்று (03) இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில், முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த 14 வயதுடைய மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குடாஒய மகா வித்தியாலயத்தில், 9ஆம் வகுப்பில் கல்வி கற்கும் தினேஸ் ருவன் என்ற மாணவனே, இந்த விபத்தில் பலியாகியுள்ளார்.

குறிப்பிட்ட மாணவன், நிகழ்வொன்றுக்காக, தனது பெற்றோரை முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்றபோது, வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும், முச்சக்கரவண்டியில் பயணித்த பெற்றோர், சிறு காயங்களுடன் உயிர்பிழைத்ததாகவும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X