Sudharshini / 2016 பெப்ரவரி 07 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
முச்சக்கர வண்டியின் சாரதி, பாதையை மாற்றியமையால், அந்த வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவர், அதிலிருந்து கீழே குதித்து படுகாயமடைந்த சம்பவமொன்று, ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
டிக்கோயாவிலிருந்து தரவளை தோட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே, அதில், பயணம் செய்து கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தாய், இவ்வாறு குதித்து காயமடைந்து, டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும், தெரியவருவதாவது,
நோர்வூட் பகுதியிலுள்ள தனியார் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் மேற்படி பெண்;, சனிக்கிழமை (06) இரவு 7 மணியளவில் டிக்கோயா நகரிலிருந்து வீட்டுக்குச் செல்வதற்காக, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் ஏறி தான் செல்லவேண்டிய இடத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தான் செல்ல வேண்டிய பாதையில் செல்லாமல் முச்சக்கர வண்டி வேறு பாதையில் செல்வதை அறிந்த அப்பெண், சாரதியிடம் முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி, தான் கூறியதை செவிமடுக்காது செல்வதை அறிந்து, முச்சக்கர வண்டியிலிருந்து வெளியே பாய்ந்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, குறித்த சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சாரதியான சந்தேக நபரை, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
21 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
51 minute ago
1 hours ago