Sudharshini / 2016 ஜூன் 06 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
தரம் 6 இல் கல்விப் பயின்று வரும் மூன்று மாணவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியக் குற்றச்சாட்டில் கைதான ஆசிரியரை, பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் ஆறு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும் பதுளை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பிக்க ராஜபக்ஷ, விடுவித்துள்ளதுடன் வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளார்.
பதுளை, கந்தகெட்டியவிலுள்ள பிரபல பாடசாலையில் பணிப்புரிந்து வந்த மேற்படி ஆசிரியர் குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, சந்தேகத்தின் பேரில் ஆசிரியரை பொலிஸார் கைதுசெய்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்களில் இருவரை, வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் மற்றைய மாணவன் தொடர்பிலான விவரங்களை திரட்டி வருவதாகவும் கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
10 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago