Sudharshini / 2016 ஜனவரி 20 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
மஸ்கெலியா ஸ்டஸ்பி தேவகந்த பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11இல் கல்வி கற்று வந்த மாணவியை, துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயன்ற ஆசிரியரை, 5000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் செல்ல ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் பிரசாத் லியனகே, இன்று (20) அனுமதியளித்தார்.
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 14ஆம் திகதி வீட்டில் தனித்திருந்த போது, மேற்படி ஆசிரியர் தன்னை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றார் என குறித்த மாணவி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து, மேற்படி ஆசிரியரை செவ்வாய்க்கிழமை (19) மஸ்கெலியா பொலிஸார் கைது செய்திருந்தனர்.
மாணவியின் பெற்றோர் ஹட்டன் கல்வி வலய அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை (19) முறையிட்டனர்., மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த ஆசிரியரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago