Kogilavani / 2016 ஓகஸ்ட் 07 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பாட்ட மோதலின் போது, வீதியில் தள்ளி வீழ்த்தப்பட்ட நபரொருவர், ஏழு நாட்களின் பின்னர் மரணமடைந்தச் சம்பவம் கண்டி, பூஜாப்பிட்டியவில் சனிக்கிழமை (6) இடம்பெற்றுள்ளது.
பூஜாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான எம்.ஜீ.பிரேமச்சந்திர (வயது 56) என்பவரே, ஏழு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கண்டி கட்டுகஸ்தோட்டை பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் கடந்த 31ஆம் திகதி இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலின்போது, மேற்படி நபர் மற்றொரு நபரினால் தள்ளி வீழ்த்தப்பட்டுள்ளார். இதன்போது இவரது தலையில் காயமேற்பட்டுள்ளப் போதிலும் அவர் ஓரிரு தினங்கள் சாதாரண நிலையிலே இருந்துள்ளார்.
எனினும், திடீர் சுகயீனம் காரணமாக மேற்படி நபர் சனிக்கிழமை (6) கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் போதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago