Sudharshini / 2016 ஜனவரி 19 , மு.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளை மாவட்டத்திலுள்ள காடுகள், சட்டவிரோதமான முறையில் சூரையாடப்பட்டு அழிக்கப்பட்டு வருவதாக சூழலியல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
' வீட்டு நிர்மாணப்பணிகள், வியாபார நடவடிக்கை போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக பெருமளவிலான பழமை வாய்ந்த காட்டு மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாத்தளை, வில்கமுவ, நாவுல, நிகுல கந்து வலல்ல மற்றும் களுகங்கையை அண்மித்த பகுதிகளிலுள்ள காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால், எதிர்காலத்தில் மத்திய மாகாணம் பாரியதொரு சுற்றுச் சூழல் பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடும்' என கிராமிய அபிவிருத்தி மத்திய நிலையத்தின் நிர்வாகி காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், ' தற்காலத்தில், தேக்கு, ஹல்முல்ல (சமுளை), மகோகனி, கெட்டகலே போன்ற தாவரங்கள், அழிவடைந்து வரும் தாவர இனங்களின் வரிசையினுள் உள்ளடக்கப்பட்டு விட்டன. மக்கள் மத்தியில் இவ்விடயம் தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்;' என்றார்.
இவ்விடயம் தொடர்பில் நாவுல வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டபொழுது, 'நாங்கள் இதுவரை காலமும் சட்டவிரோதமான முறையில் காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இவ்விடயம் தொடர்பில் பொது மக்களும் பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் செயற்படுவதன் மூலம் இக்காடழிப்பினைக் குறைக்கலாம்.' எனத் தெரிவித்தனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago