2025 ஜூலை 09, புதன்கிழமை

மின்னல் தாக்கம்: மின் உபகரணங்கள் சேதம்

Kogilavani   / 2015 நவம்பர் 23 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா

பூனாகலை பெருந்தோட்ட யு.எல்.எல்.ஜி பிரிவில், சனிக்கிழமை ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக 6 வீடுகளிலுள்ள மின்மானிகள் எரிந்து சேதமாகியுள்ளதுடன் வீடுகளிலிருந்த மின்சாதன பொருட்களும் சேதமாகியுள்ளன.

இதேவேளை, குறித்த லயன் குடியிருப்புக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் லயன் தொகுதிகளில்  வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவு காரணமாக மக்களுக்கு எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும் அப்பகுதியில் மக்கள் வழிபட்டு வந்த காளி தெய்வத்தின் சிலை மட்டும் மண்ணில் புதையுண்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .