Kogilavani / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
கண்டி கெட்டம்பே வராதென்னை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட உள்ளதாகக் கூறப்படும் மின் உற்பத்தி நிலையத்தை, அவ்விடத்தில் அமைக்க வேண்டாமெனக் கோரி, பிரதேச மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கெட்டம்பே வராதென்னை மஹாவலி கங்கைக்கு அருகில் ஒன்று சேர்ந்த பிரதேச மக்கள், பதாகைகளுடன் கெட்டம்பே பாலத்துக்கருகில் வந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வராதென்னையில் பௌத்த பிக்கு சிஷ்யர்களை பயிற்றிவிற்கும் (உபசம்பதா மேற்கொள்ளும்) நிலையம் அமைந்துள்ளதுடன் சுற்றாடல் துறையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் இவ்விடம் அமைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் நீர் மின்நிலையத்துக்கு சமீபமாக சுற்றுலா விடுதியொன்றும் கழியாட்ட நிலையமும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர்கள், இது பௌத்த கலாசாரத்துக்கு முற்றிலும் புறம்பானது என்றும் தெரிவித்தனர்.
45 minute ago
9 hours ago
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
9 hours ago
17 Apr 2026
17 Apr 2026