2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மானிய உரம் கிடைக்காமைக்கு விவசாயிகள் கவலை

Sudharshini   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஞ்சன குமார ஆரியதாச

தம்புள்ளை கமநல சேவை நிலையத்தினால் வழங்கப்படும்  மானிய உரம், ஒரு மாதத்துக்கு மேலாக தமக்கு வழங்கப்படவில்லை என தம்புள்ளை விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மானிய உரத்துக்கான பணத்தை கமநல சேவை அலுவலகத்தில் செலுத்தி ஒரு மாதமாகிவிட்ட நிலையில், இது வரை மானிய உரம் தமக்கு கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், விவசாயிகள் கால தாமதமாக வந்தமையே இதற்கு  காரணம் எனவும் இதனால் மானிய உரத்துக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் கமநல சேவை அலுவலக முகாமையாளர்  மல்லிகா குமாரிஹாமி தெரிவித்துள்ளார்.

உரம் பெற்றுக்கொள்;ளவதில் விவசாயிகளிடம் அக்கறையின்மையே இதற்கு காரணம் எனவும் அவர் மேலும் சுட்டிகாட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .