George / 2016 ஜூன் 02 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
தரம் 6 இல் கல்விப் பயின்று வரும் மூன்று மாணவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியக் குற்றச்சாட்டில் கைதான ஆசிரியரை, எதிர்வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பிக்க ராஜபக்ஷ, இன்று வியாழக்கிழமை (2) உத்தரவிட்டார்.
பதுளை, கந்தகெட்டியவிலுள்ள பிரபல பாடசாலையில் பணிப்புரிந்து வந்த ஆசிரியரே விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். இவர், தரம் 6இல் கல்வி கற்று வந்த மூன்று மாணவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்களில் இருவர், வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் மற்றைய மாணவன் தொடர்பிலான விவரங்களை திரட்டி வருவதாகவும் கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
9 minute ago
21 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
33 minute ago