2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மேபீல்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2016 மே 06 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன் 

கொட்டகலை, மேபீல்ட் தோட்டத்தில் மண்சரிவு அபாயாம் காரணமாக வெளியேற்றப்பட்டு தோட்ட மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 59 பேருக்கான  உலருணவுப் பொருட்கள் இன்று(6) வழங்கப்பட்டன.

ஹட்டன் பிரதேச அமைப்பாளர் ஜெஸ்டீன் இப்பொருட்களை வழங்கி வைத்தார்.

இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் 14 சிறுவர்கள், 20 பெண்கள், 25 ஆண்கள் உள்ளடங்குகின்றனர். 

இவர்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் மூன்று நாட்களுக்கு தோட்ட நிர்வாகம் மற்றும் கிராமசேவகர் வாயிலாக வழங்கப்படுமெனவும் மீதமுள்ள நாட்களுக்கு பொதுநல அமைப்புகள்  உலருணவு பொருட்களை வழங்குவதற்கு முன்வர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கமைவாகவே தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹட்டன் பிரதேச அமைப்;பாளர் உலருணவு பொருட்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .