Niroshini / 2016 மே 13 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்
ஹட்டன் கல்வி வலயம் நடத்திய தமிழ் மொழித்தின போட்டியில் டிக்கோயா தமிழ் வித்தியாலதிருந்து 6 மாணவிகள் மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் ஏ.ஜே.நிகலஸ் தெரிவித்தார்.
தமிழ் மொழித்தினத்தினையொட்டி, ஹட்டன் கல்வி வலயம் நடத்திய தமிழ் தின போட்டியில் கடந்த சில தினங்களாக புளியாவத்தை தமிழ் மகா வித்தியாலயம், ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி மற்றும் புனித ஜோன் பொஸ்கோ ஆகிய கல்லூரிகளில் போட்டிகள் நடைபெற்றன.
இப்பாடசாலையில் நடைபெற்ற போட்டிகளில் சிறுகதை போட்டியில் செ.சரமிளா என்ற மாணவி முதல் இடத்தையும் இலக்கணம் போட்டியில் செ.ஸ்ரீதேவிகா என்ற மாணவியும் தமிழறிவு போட்டியில் பி.சுசந்திகா, செசரண்யா, ம.நிஸாந்தினி. யோ.ரம்யலதா, செ.ஸ்ரீதேவிகா ஆகிய மாணவிகள் முதலாம் இடங்களை பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
27 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
4 hours ago
4 hours ago