2026 பெப்ரவரி 25, புதன்கிழமை

யாத்திரீகர்கள் பயணித்த கார் விபத்து

Janu   / 2026 பெப்ரவரி 24 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அளுத்கம பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்கு வந்து தரிசனம் செய்து வீடு திரும்பிக்கொண்டிருந்த குழுவினர் பயணித்த கார் நல்லதண்ணி -  மஸ்கெலியா பிரதான வீதியின் ரக்காடு கிராம பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (24) அன்று  வேக கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில்  காரின் சாரதி காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். 

மேலும் காரில் பயணம் செய்த மூவருக்கு காயங்கள் ஏற்படவில்லை என நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளது . 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .