Princiya Dixci / 2017 மே 05 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் மோதி, நபரொருவர் உயிரிழந்துள்ளாரென, வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டவளை பிரிவுக்குட்பட்ட வட்டவளை ரயில் நிலையத்துக்கு அருகாமையில் இன்று (05) பகல் 2 மணியளவில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டவளை இல.101 கொலனியைச் சேர்ந்த நல்லகண்ணு காளியப்பன் (வயது 78) என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சடலம், வட்டவளை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


19 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
49 minute ago
1 hours ago