Yuganthini / 2017 ஜூன் 08 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
வீசா காலாவதியான நிலையில், பதுளை எல்ல பகுதியில் தங்கியிருந்த ரஷ்ய நாட்டு இளைஞனுக்கு, பண்டாரவளை நீதவான் நீதிமன்ற நீதவான் டபிள்யூ.பி.குணசேகர 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், ஒருவருட சிறைத்தண்டயையும் விதித்து, புதன்கிழமை தீர்ப்பளித்தார்.
ரஷ்யா நாட்டைச் சேர்ந்த, வௌன்டின் ரொமாசொஸ்கி என்ற 28 வயது இளைஞனுக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அபராதம் செலுத்தப்படாத பட்சத்தில், சிறைத்தண்டனை மேலும் நீடிக்குமென்றும் நீதவான் உத்தரவிட்டார்.
வெளிநாட்டைச் சேர்ந்த இளைஞரொருவர், எல்ல பகுதியில் நீண்டகாலமாக வசித்து வருவதாக எல்ல பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, பொலிஸார் குறித்த இளைஞனை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
15 minute ago
24 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
54 minute ago
1 hours ago