2025 ஜூலை 17, வியாழக்கிழமை

’’லயன்ஸ்’’ கழகத்தின் 58 ஆவது தலைவர் பதவியேற்பு

Janu   / 2023 ஜூன் 25 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நுவரெலியா "லயன்ஸ்" கழகத்தின் 2023 / 2024 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை பதவியேற்பு வைபவம் நேற்று முன் தினம் (24) சனிக்கிழமை மாலை நுவரெலியா நிப்பூன் கிறேண்ட் சுற்றுலா விடுதியில் "லயன்ஸ்" கழக முன்னாள் தலைவர் வைத்தியர் திருமதி ஜெயராணி இராஜரட்ணம் தலைமையில்  நடைபெற்றது.

இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட "லயன்ஸ்  C 2 " பிரிவின் முன்னாள் ஆளுநர் நிமால் ரணவக்க முன்னிலையில் புதிய தலைவராக ஜெகதீஸன் குமரேஷ், செயலாளராக நாகேந்திரன் தஸாந்தன், பொருளாளராக ஆர். குணசேகரன் ( சிவா) உட்பட புதிய நிர்வாக சபையினர் பதவி  ஏற்றுக்கொண்டனர்.

எஸ். கே. குமார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X