Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 டிசெம்பர் 21 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
லுணுகலை பிரதேச சபையின் புதிய தவிசாளரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில், ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த ஒருவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவருமாக இருவர் போட்டியிட்டனர்.
இதில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த L..P.N.U.A.அநுரவிக்ரமதுங்க மேலதிக மூன்று வாக்குகளால் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவருக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த 3 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இந்த நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியியைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட R.W.P.L.U. எட்வினுக்கு 7 வாக்குகளே கிடைக்கப்பெற்றன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மூவரும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர்கள் இருவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் இருவருமாக மொத்தமாக 7 வாக்குகள் கிடைக்கப்பெற்றன.
மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் ஒருவரும் மலையக மக்கள் முன்னணியின் ஒருவரும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த ஒருவரும் நடுநிலை வகித்தனர்.
2023 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பின் போது லுணுகலை பிரதேச சபை 2 தடவைகள் தோல்வியடைந்த நிலையிலேயே புதிய தவிசாளர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .