2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

‘வஞ்சகத்தனமான கோரிக்கையை ஏற்கோம்’

ஆ.ரமேஸ்   / 2020 மே 12 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க ஊழியர்களின் மே மாதச் சம்பளத்தை கேட்கும், வஞ்சகத்தனமான கோரிக்கை நிராகரிக்கப்படல் வேண்டும் என, ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் வெ.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (12) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளதாது,

கொரோனா நிவாரண நிதி  என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மில்லியனைக் கடனாகவும் நன்கொடையாகவும் பெற்றும் பெற முயற்சித்தும் வரும் அரசாங்கம், அவற்றை மக்கள் முன் வெளிப்படுத்தாமல் மறைத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஆரம்பத்தில் இருந்தே, மாறி மாறி ஆட்சியை முன்னெடுத்து வரும் அரசாங்கங்கள், கோடீஷ்வரர்களையும் பல்தேசிய கம்பனிகளையும் பாதுகாக்க முயற்சிக்கும் அளவுக்கு,  மக்கள் மீது கரிசணை காட்டுவது குறைவாகவே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில், 80 சதவீதத்தை அனுபவிப்பவர்களிடம் கைநீட்டாத அரசாங்கம் அரைகுறை சம்பளத்தோடு கடன்களை சுமந்துகொண்டிருக்கும் அரசாங்க ஊழியர்களின் வயிற்றில் அடிக்க எத்தனிக்கும் முயற்சியை, வன்மையாக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நெருக்கடி மிக்க சூழலில், அனைத்து மக்களையும் பாதுகாக்கவேண்டிய கடமையை அரசாங்கம் முறையாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அதேவேளை, பகுதியாகவோ முழுமையாகவோ, எத்தவொரு தரப்பினரினதும் வருமானத்தைப் பறிக்கும் சூழ்ச்சிகள் கைவிடப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .