2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

வரட்சியால் 743 குடும்பங்களைச் சேர்ந்த 2,609 பேர் பாதிப்பு

Kogilavani   / 2017 மே 16 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட்  ஆஸிக்

கண்டி மாவட்டம், ஹாரிஸ்பத்துவ, குண்டசாலை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த சில மாதங்களாக நிலவிவந்த கடும் வரட்சி காரணமாக, 743 குடும்பங்களைச் சேர்ந்த 2,609 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் இந்திக்க ரணவீர தெரிவித்தார்.

ஹாரிஸ்பத்துவ பிரதேச செயலகப் பிரிவில் 593 குடும்பங்களைச் சேர்ந்த 2,009 பேரும்  குண்டசாலை  பிரதேச செயலகப் பிரிவில்  150 குடும்பங்களைச் சேர்ந்த 600 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.

கண்டி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்னர் மழைபெய்த போதிலும், வரட்சியால்  ஏற்பட்ட பாதிப்பு இன்னும் நீங்கவில்லை என்றும் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை,  கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .