2026 ஜனவரி 21, புதன்கிழமை

வருடாந்தத் திருவிழா

Kogilavani   / 2021 ஏப்ரல் 12 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷன்

அக்கரப்பத்தனை பெரிய நாகவத்தை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் வருடாந்தத் தேர்த்திருவிழா, நாளை மறுதினம் (14) காலை 5 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

அன்றைய தினம் காலை 5 மணிக்கு, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பிரவேசபலி இடம்பெற்று கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ளது.

அன்று மாலை ஒரு மணியளவில், தோட்டத்தில் உள்ள கங்கையில் கரகம் பாலித்தல் இடம்பெறும்.

15 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு புண்ணியாகவாஜனம், பால்குட பவனி, காவடி பாலித்தல், சங்காபிஷேகம், விசேட அலங்கார பூஜைகள், மகேஸ்வர பூஜையுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

16ஆம் திகதி அன்று 9.15 அளவில் வசந்த மண்டப பூஜை நடைபெற்று   தேர்பவனி இடம்பெறவுள்ளது. 18ஆம் திகதி காலை 10 மணிக்கு தீர்த்த உற்சவமும் கொடி இறக்கமும் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X