Janu / 2026 மே 03 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெல்லவாய, மகாஆரகம - சிறிபுர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தஹம் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் மகாஆரகம, சிறிபுர பகுதியை சேர்ந்த, புதுருவகல வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் ஆர்.எம். சதிதி நிபுணிகா (14 வயது) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வெஹெரயாய கங்காராம விகாரையிலுள்ள தஹம் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த வெல்லவாய இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போவுக்கு சொந்தமான பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தில் பலத்த காயமடைந்த தந்தையும் மகளும் ஹந்தபானாகல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் மரணம் தொடர்பான மரணப் பரிசோதனைகள் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் குடாஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சுமனசிறி குணதிலக்க

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .