2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

வாக்காளர் இடாப்பின் பதிவு நடவடிக்கை நாளை முதல் ஆரம்பம்

ஆ.ரமேஸ்   / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா தேர்தல் தொகுதியில் வாக்காளர் இடாப்பில் வாக்களிக்கத் தகுதியுடையவர்களின் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கை, நாளை (16) ஆரம்பிக்கப்படவுள்ளது என, பிரதேச கிராமசேவகர்கள் தெரிவித்தனர்.

2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் பெயர்களை உள்வாங்கும் நடவடிக்கை, நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை, ஹங்குராங்கெத்த, கொத்மலை ஆகிய தேர்தல் தொகுதிகளில், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் வாக்காளர் பதிவு நடவடிக்கை, நாளை முதல் நுவரெலியா தேர்தல் தொகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், வாக்காளர்களுக்கான விண்ணப்பப்படிவங்கள், ஒவ்வொரு கிராம சேவகர்கள் ஊடாக விநியோகிக்கப்படும் என்றும் 18 வயது பூர்த்தியானவர்கள், தத்தமது குடும்ப அங்கத்தவர்களுடன் வாக்காளர் இடாப்பில் தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் வாக்காளர் இடாப்பில் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்வதற்கான தகதிகான் ஆவணங்களை, கிராம சேவகர்களின் கவனத்துக்கு கொண்டு வந்து, தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின் பெருந்தோட்டங்களைச் சேர்ந்தவர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்ய அக்கறைக்காட்டவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .