Kogilavani / 2021 மார்ச் 22 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில், இலங்கை, இந்திய சமுதாய பேரவையின் செயற்குழு உறுப்பினர்களுடனான சந்திப்பு, நாவலப்பிட்டியிலுள்ள விருந்தகமொன்றில் நடைபெற்றது.
'நாவலப்பிட்டி மலையகக் கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் பேரில், இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
இச்சந்திப்பில், பெருந்தோட்ட பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
அத்துடன் பெருந்தோட்ட பாடசாலைகளை எவ்வாறு அபிவிருத்திச் செய்வது தொடர்பாக முக்கியக் கவனம் செலுத்தப்பட்டதுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை, இந்திய சமுதாய பேரவையின் தலைவர் ராஜுசிவராமன் மற்றும் பேரவையின் அங்கதவர்கள், உட்பட சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பணிப்பாளர்கள், இ.தொ.காவின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஆகியோருடன் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026