Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். செல்வராஜா / 2017 ஜூலை 29 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
“உமா ஒயா வேலைத்திட்டம் தொடர்பாக, என்னால் முன்வைக்கப்பட்ட வினாக்களுக்கு, மாகாண முதலமைச்சர் விடையளிக்க மறுப்பது, பெரும் கவலைக்குரிய விடயமாகும்” என்று, ஊவா மாகாண சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தன் குறிப்பிட்டார்.
சபைத்தலைவர் ஏ.எம்.புத்ததாச தலைமையில், ஊவாமாகாண சபை மண்டபத்தில், நேற்று (28) ஊவா மாகாண சபை அமர்வு இடம்பெற்றது.
இதன்போது, சபை உறுப்பினர் எம்.சச்சிதானந்தன் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்
அவர் தொடர்ந்து கூறுகையில்,
“'உமா ஓயா வேலைத்திட்டம் குறித்து, கேட்கப்படும் வினாக்களுக்கு, என்னால் பதிலளிக்க முடியாது. அவ்வேலைத்திட்டம் மத்திய அரசாங்கத்தைச் சார்ந்ததினாலேயே, என்னால் பதில் கூற முடியவில்லை' என்று முதலமைச்சர் கூறினார்.
“இதனை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. இவ் வேலைத்திட்டம் மத்திய அரசை சார்ந்ததாலும் அத்திட்டத்தினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பண்டாரவளை, எல்ல, வெலிமடை ஆகிய பகுதிகளைக் சேர்ந்தவர்களாவர். இப்பகுதி மக்களை, நான் பிரதிநிநித்துவம் செய்வதால், நான் முன்வைக்கும் வினாக்களுக்கு, மாகாண முதலமைச்சர் பதில் கூறியே ஆகவேண்டும்.
“இம் மாகாண முதலமைச்சர் இம் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தெரிவு செய்யப்படுவதற்கும், எமது ஐனாதிபதி தெரிவாவதற்கும், உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் , வாக்குகளை வழங்கியுள்ளனர்.
“இவ் வேலைத்திட்டம் மத்திய அரசாங்கத்தை சார்ந்ததென்று, எமது முதலமைச்சர் தட்டிக்கழித்தாலும், உமா ஓயா திட்டம் குறித்து ஐனாதிபதி மைத்திரிபால் சிரிசேன கலந்துரையாடல் நடாத்தும் போது, எமது முதலமைச்சர் மற்றும் எமது மாகாணசபை உறுப்பினர் சமந்த வித்தியாரட்ன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். ஆகையினால், எமது முதலமைச்சர் எனது வினாக்களுக்கு எமக்கு பதில் கூறியே ஆக வேண்டும். பொறுப்பிலிருந்து அவர் விலகிச்செல்ல முடியாது.
“உமாஓயா வேலைத்திட்டத்தினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்களை முன்னிலைப்படுத்தியே, கீழ்க்காணும் வினாக்களை முன்வைக்கின்றேன். அவ்வினாக்களுக்கு எமது முதலமைச்சர் பதில் வழங்க முன்வரவேண்டும்” என்று அவர் கூறினார்.
எனினும், மாகாண முதலமைச்சர், சபை அமர்வில் பிரசன்னமாகி இருக்கவில்லை.
37 minute ago
41 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
41 minute ago
6 hours ago