2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

வினாத்தாள் திருத்தும் பணியில் பரீட்சை எழுதிய ஆசிரியர்

எஸ்.சதிஸ்   / 2018 டிசெம்பர் 24 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் வினாத்தாள் திருத்தும் பணிகளுக்கு, இம்முறை சிங்களப் பரீட்சையில் தோற்றிய ஆசிரியர் ஒருவர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக, இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர், பரீட்​ைசகள் திணைக்களத்துக்கு முறைப்பாடு செய்துள்ளார்.  

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஹட்டன் கல்வி வலயத்துக்குட்ட ஹட்டன் பொஸ்கோஸ் கல்லூரியில், சிங்களப் பரீட்சை எழுதிய ஆசிரியர் ஒருவர் பணிக்கு அமர்த்தப்ப ட்டுள்ளமை தொடர்பாகவே, இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக, மலையக ஆசிரியர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு முறைப்பாடு செய்துள்ளது.  

இதையடுத்தே, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர், பரீட்சைகள் திணைக்களத்துக்கு முறைப்பாடு செய்துள்ளார். ஹட்டன் ஸ்ரீபாத கல்லூரியில் சிங்களப் பரீட்சைக்குத் தோற்றிய ஆசிரியர் ஒருவரே, இவ்வாறு பொஸ்கோ கல்லூரியில் இடம்பெற்ற வினாத்தாள் திருத்தும் பணிக்கு, ஹட்டன் வலயக் கல்வி பணிப்பாளரூடாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .