R.Maheshwary / 2021 ஜூலை 12 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பண்ணைக்கு அருகாமையில், இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுங்காயமடைந்தனர்.
கொட்டகலை நகரிலிருந்து லொக்கீல் நோக்கி பயணிப்பதற்கு தயாரான வான் ஒன்றில், வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியுள்ளது.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுங்காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும், கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
52 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
3 hours ago