2026 ஜனவரி 21, புதன்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Kogilavani   / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

நல்லதண்ணி - மஸ்கெலியா பிரதான  வீதி, மோகினி எல்ல பகுதியில், சிறிய ரக கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, மவுசாகல நீர்த்தேக்கப் பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த பெண்ணொருவர் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில், கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படிக் காரனாது, பள்ளத்தில் விழுந்து மரமொன்றில் சிக்கி நின்றுள்ளதாக  நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீரசேகர தெரிவித்தார்.

விபத்தில் காயமடைந்தவர்கள் அவசர அம்பியுலன்ஸ் வண்டியூடாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

விபத்துத் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X